News August 22, 2025
கப்பற்படையில் 1,266 பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய கப்பற்படையில் ‘டிரேட்ஸ்மேன்’ பிரிவில் காலியாகவுள்ள 1,266 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷிப் பில்டிங் டிரேடு, இன்ஜின் டிரேடு, மெஷின் டிரேடு உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித்தகுதி: +2. வயது வரம்பு: 18 – 25. தேர்வு முறை: எழுத்து & திறனறித் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.2. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News August 22, 2025
இதுக்கு சரியா பதில் சொல்லுங்க பார்ப்போம்!

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்ட்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. இது பார்க்க பயங்கர கஷ்டமான கேள்வியாக தோன்றலாம். ஆனால், மூளையை கசக்கி பிழிந்தால், ரொம்ப ஈசிதான். எத்தனை பேர் கரெக்ட்டா பதில் சொல்றீங்கனு பார்ப்போம். ஒரே ஒரு குட்டி Hint: 3 லைன் உள்ளது.
News August 22, 2025
ஸ்வராஜ் பால் காலமானார்.. PM மோடி இரங்கல்

பிரபல தொழிலதிபரும், சமூக சேவகருமான லார்ட் ஸ்வராஜ் பால் (94), உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவர் தனது தொண்டு நிறுவனங்கள் மூலம் எண்ணற்ற குழந்தைகள், இளைஞர்களுக்கு கல்வி, மருத்துவ சேவைகளை வழங்கி வந்தார். Caparo Group of industries-ன் நிறுவனரான இவரின் மறைவுக்கு PM மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியா உடனான உறவில் அவரது ஆதரவையும் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
News August 22, 2025
சீமானை காப்பியடித்தாரா விஜய்?

இளவரசரை தேர்வு செய்ய நெல்மணியை கொடுத்து பயிராக்க சொன்னாராம் மன்னர். அதை பெற்றுச் சென்றவர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் முளைத்த கதிரோடு வந்தனர். ஆனால் கொடுத்த விதையை அப்படியே கொண்டு வந்தவரே இளவரசரானார். ஏனென்றால் அவர் கொடுத்தது அவித்த விதை. இந்த கதையையே தவெக மாநாட்டில் விஜய் சொன்னார். இது ஏற்கெனவே 2021-ல் சீமான் கூறியிருக்கிறார். எனவே சீமானை விஜய் காப்பியடித்துள்ளதாக நாதகவினர் கூறி வருகின்றனர்.