News August 22, 2025

ஈரோட்டில் பருவ காய்ச்சலை தடுக்க நடவடிக்கை!

image

ஈரோட்டில் பருவகால காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் குடிநீரை கொதிக்கவைத்து குடிக்க வேண்டும், என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். 3 நாளுக்கும் மேலாக காய்ச்சல், இருமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். வீடுகளுக்கு அருகில் தண்ணீர் தேங்காதவாறு சுத்தமாக வைத்திருக்கவும், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Similar News

News August 22, 2025

ஈரோடு அருகே கொடூர விபத்து: பெண் பலி

image

கோவை குனியமுத்தூரை சேர்ந்த முகமதுஅலி – ஜான்சாபானு தம்பதியினர் சேலத்தில் இருந்து கோவை நோக்கி இருசக்கர வாகனத்தில் நசியனூர் அருகே சென்றபோது நிலைதடுமாறி இருசக்கர வாகனம் சரக்கு லாரி பின் சக்கரத்தில் சிக்கியதில் ஜான்சா பான உடல் நசங்கி கணவன் கண்முன்னே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். இதில் முகமது அலி லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினார். விபத்து குறித்து சித்தோடு போலசார் விசாரணை மேற்கொண்டனர்.

News August 22, 2025

ஈரோடு மாவட்டத்தின் தனி சிறப்புகள் அறிக!

image

* தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது,
* இங்கு கைத்தறி துணி உற்பத்தி பிரபலம்,
* வரலாற்றுச் சிறப்பாக சோழர், பாண்டியர், கங்கர், போசாளர் போன்ற அரச மரபினர் ஆட்சி செய்துள்ளனர்.
* சுற்றுலாத் தலங்களாக பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில், கொடிவேரி அணை, பண்ணாரி அம்மன் கோயில், சென்னிமலை முருகன் கோயில், பவானிசாகர் அணை என பல சிறப்புக்கள் உள்ளது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் பண்ணுங்க.

News August 22, 2025

ஈரோடு பூம்புகாரில் விநாயகா் சிலைகள் கண்காட்சி, விற்பனை

image

ஈரோடு மேட்டூா் சாலை அருகே பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி வரும் ஆகஸ்ட் 30- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனையில் பித்தளை, பேப்பா் கூழ், மண், வெள்ளெருக்குவோ், மாா்பில் பவுடா், மாவுக்கல், கருங்கல் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது.

error: Content is protected !!