News August 22, 2025
BREAKING: பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை

தென் அமெரிக்கா – அண்டார்டிகா கண்டங்களுக்கு இடையே உள்ள டிரேக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளதால், ராட்சத கடல் அலைகள் தோன்றியுள்ளன. குறிப்பாக சிலி மற்றும் அர்ஜெண்டினா நாடுகளுக்கு தற்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரஷ்யா, ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி தாக்கியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 27, 2026
உணவகங்களில் கூடுதல் கட்டணம்? இதோ புகார் எண்

LPG, எரிபொருள் தட்டுப்பாட்டை காரணமாக வைத்து பல ஹோட்டல்களில் LPG Fees என ₹20 முதல் ₹50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இந்நிலையில், ஹோட்டல் பில்லில் வசூலிக்கப்பட்டால், உடனடியாக 1915 என்ற எண்ணில் அழைத்து புகாரளிக்கலாம் என தேசிய நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், E-JAGRITI தளத்திலோ அல்லது NCH செயலியிலோ ஆதாரத்துடன் புகாரை பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆபாச பேச்சு.. மன்னிப்பு கேட்ட பொன்ராஜ்

தவெகவை ஆதரிக்கும் மகளிரை தகாத வார்த்தையால் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் திட்டியிருந்தார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விஜய் கமிஷனர் ஆபிஸில் புகாரளித்தார். இந்நிலையில், காயம்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்பதாக SM-ல் பதிவிட்டுள்ள பொன்ராஜ், எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார். மிரட்டல் அழைப்புகள் விடுத்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.