News August 22, 2025
திடீர் ஓய்வை அறிவித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்

சுழற்பந்து வீச்சாளர் கௌஹர் சுல்தானா(37) அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். 2008-ம் ஆண்டு அறிமுகமான இவர், 50 ODI போட்டிகளில் 66 விக்கெட்களும், 37 T20 போட்டிகளில் 29 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். மேலும், 2009 & 2013 ODI WC, 3 T20 WC தொடர்களிலும் விளையாடியுள்ளார். 2024 & 2025 WPL தொடர்களில் UP வாரியர்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை சுல்தானா வெளிப்படுத்தி இருந்தார்.
Similar News
News March 22, 2026
படுக்கைக்கு அழைப்பு.. பிரபல நடிகை பகீர்

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என தெலுங்கு நடிகை ஸ்ரீ சத்யா குற்றஞ்சாட்டியுள்ளார். மிஸ் விஜயவாடா அழகி பட்டம் வென்று சினிமாவில் அறிமுகமான அவர், பிக்பாஸில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், சினிமா இண்டஸ்ட்ரியில் ‘அட்ஜஸ்மெண்ட்’ தொல்லை இருந்ததால் சீரியல் பக்கம் திரும்பியதாக குறிப்பிட்ட அவர், நடிப்பில் கவனம் செலுத்தும் பெண்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
News March 22, 2026
கரூர் ஃபார்முலாவில் திமுக? செந்தில் பாலாஜி

கரூரில் வாக்காளர்களை அடைத்துவைக்க <<19438297>>மனிதப்பட்டிகளை<<>> திமுக தயார் செய்வதாக அதிமுக Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர் புகாரளித்திருந்தார். இந்நிலையில், ஒவ்வொரு வார்டுக்குமான பூத் கமிட்டி அலுவலகங்கள் தான் அவை என்றும், அதற்குரிய அனுமதியை முறையாக திமுக பெற்றுள்ளதாகவும் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே அதிமுகவினர் ஆளும்கட்சி மீது வைப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
News March 22, 2026
மதுப் பிரியர்கள் அதிர்ச்சி.. தேர்தலால் வந்த மாற்றம்

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை தொடர்ந்து, அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் முக்கிய உத்தரவு பறந்துள்ளது. அதன்படி, ஒரு கடையில் திடீரென 30%-க்கு மேல் விற்பனை அதிகரித்தால் அங்கு தீவிரமாக சோதனை நடத்தப்படும் என எச்சரித்துள்ளது. மேலும், 50%-க்கு அதிகமாக மதுபானங்களை இருப்பில் வைக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மதுப் பிரியர்கள் அதிகளவில் மது வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


