News August 22, 2025

உங்க செல்போனில் உடனே இதை செக் பண்ணுங்க

image

பல போன்களின் Calling Interface மாற்றப்பட்டுள்ளது. அதாவது, முன்னர் வரும் அழைப்பை Attend அல்லது Reject பண்ண, மேலே அல்லது கீழே Swipe செய்வோம். இது தற்போது, இடது- வலது புறமாக Swipe செய்யும் வகையில் மாறியுள்ளது. Realme, Oneplus, Moto, Oppo, Vivo போன்ற போன்களில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பயனாளர்கள் வேண்டுமென்றால், பழைய படி மேலே- கீழே Swipe செய்யும் வகையிலும் மாற்றிக் கொள்ளலாம்.

Similar News

News March 24, 2026

RR அணியை ₹15,290 கோடிக்கு வாங்கிய கல் சோமானி

image

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ₹15,290 கோடிக்கு அமெரிக்காவை சார்ந்த தொழிலதிபர் கல் சோமானி தலைமையிலான முதலீட்டாளர்கள் கூட்டமைப்பு வாங்கியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்ததும், ராஜஸ்தான் ராயல்ஸின் மொத்த உரிமமும் கல் சோமானியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதுகுறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

News March 24, 2026

விசிக கடந்து வந்த பாதை

image

மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ள போதிலும், தொடர்ந்து 2-வது முறையாக ஒற்றை இலக்க சீட்களிலேயே விசிக களம் காண்கிறது. சட்டப்பேரவை தேர்தல்களில் விசிக கடந்து வந்த பாதை: 2001 – 8(திமுக+), 2006 -9(அதிமுக+), 2011 – 10(திமுக+), 2016 – 25(மக்கள் நலக்கூட்டணி), 2021 – 6(திமுக+), 2026 – 8(திமுக+). இரட்டை இலக்க தொகுதிகளை விசிக எதிர்பார்த்த நிலையில் கூடுதலாக 2 சீட் கிடைத்துள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து?

News March 24, 2026

சட்டமன்றத் தேர்தல்: EPS-ன் அடுத்த திட்டம்!

image

சட்டப்பேரவை தேர்தலுக்கான அடுத்தக்கட்ட பிரசாரத்தை நாளை முதல் EPS தொடங்குகிறார். சென்னை மயிலாப்பூரில் உள்ள மந்தைவெளி பகுதியில் மாலை 4 மணி அளவில் பிரசாரம் செய்யவுள்ளார். அடுத்தடுத்த நாள்களில் ஆலந்தூர், தாம்பரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், நாகர்கோவில், ராதாபுரம், கடையநல்லூர், கோவில்பட்டி, சிவகாசி, பரமக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!