News August 22, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28-ந் தேதி காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பிரச்சினைகளை களைந்திட கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுப்பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்தார்.
Similar News
News August 22, 2025
ராணிப்பேட்டை: கடன் தொல்லை தீர இங்கு போங்க

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்வெண்பாக்கத்தில் ஸ்ரீ சுதந்திர லக்ஷ்மி நாயகி சமேத யுக நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ராணிப்பேட்டையில் உள்ள பழமையான கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசித்து சென்றால் திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், கடன் தொல்லை நீங்கி செல்வம் பெருகும் என்பதும் ஐதீகம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 22, 2025
ராணிப்பேட்டை காவல்துறை எஸ்.பி நடவடிக்கை

இன்று ஆகஸ்ட் 22 ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஆறு உதவி ஆய்வாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி திமிரி, ஆற்காடு, பாணாவரம், சோளிங்கர் மற்றும் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி உத்தரவிட்டு உள்ளார்.
News August 22, 2025
ராணிப்பேட்டை: மாதம் ரூ.64,480 வரை சம்பளம்

REPCO வங்கியில் Customer Service Associate/ Clerk வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாதம் ரூ.24,050 – ரூ.64,480 வரை வழங்கப்படும். முக்கியமாக இந்த பணிக்கு online தேர்வு மட்டுமே, நேர்முக தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் <