News August 22, 2025
Specified Employee வருமான வரி விலக்கில் மாற்றம்

Specified Employee-ன் வருமான வரம்பு ₹50,000-லிருந்து ₹4 லட்சமாக உயர்த்தி மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்த வகை ஊழியர்களுக்கு நிறுவனத்தால் வழங்கும் வட்டியில்லா கடன், வாகனம், மின்சாரம் உள்ளிட்டவற்றிற்கு இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும், வெளிநாட்டு மருத்துவ செலவுகளுக்கான வரி விலக்கை பெறுவதற்கான வருமானம் ₹2 லட்சத்திலிருந்து ₹8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Similar News
News August 22, 2025
மதிய உணவிற்குப் பிறகு சோம்பலா.. இதை பண்ணுங்க!

ஆபிசில் இருக்கும் போது, சாப்பிட்ட பிறகு, பயங்கரமாக தூக்கம் வரும். இதனால், வேலையும் கேட்டுவிடும். அப்படி, தூக்கம் வராமல் இருக்க..
*மதியம் எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
*நிறைய தண்ணீர் குடியுங்கள்.
*சிறிது தூரம் நடப்பது, உடலை சுறுசுறுப்பாக்கி, மந்த நிலையை விரட்டும்.
*கண்டிப்பாக காஃபினை தவிர்க்கவும்.
*தூக்கம் வந்தால், சுவாசப்பயிற்சி செய்யவும்.
News August 22, 2025
கல்வி ஒன் சைட் லவ் மாதிரி.. அன்பில் மகேஷ்

கல்வியை காதலுடன் ஒப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதுதான் தற்போதைய ஹாட் டாபிக். தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்வி என்பது முதலில் ஒன் சைட் லவ்வாகவே இருக்கும், பிறகு நீங்கள் அதனை காதலிக்க தொடங்கியதும் அது டபுள் சைட் லவ்வாக மாறிவிடும்’ எனக் கூறியுள்ளார். எனவே, மாணவர்கள் அடுத்தடுத்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?
News August 22, 2025
பொது அறிவு வினா- விடை பதில்கள்!

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு இங்கே <<17481425>>கிளிக் <<>>செய்யவும்.
1. சென்னப்ப நாயக்கர்
2. உத்தர பிரதேசம்
3. உதடு
4. 21%
5. அடிலெய்டு மைதானம், ஆஸ்திரேலியா
நீங்க எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?