News August 22, 2025
100 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்க இலக்கு – ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படிப்பு பயில விரும்பும் மாணவ – மாணவிகளுக்கு கல்விக்கடன் பெற ரூ.100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்தார். இதில் இதுவரை ரூ.28 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது என்றும், மாணவ-மாணவியர்கள் உயர்கல்விக்கு கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பித்து கடன் பெறலாம் என்றும் அவர் கூறினார்.
Similar News
News August 22, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆக.22) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.62 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 64.90 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.43 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.53 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 556 கன அடி, பெருஞ்சாணிக்கு 154 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
News August 22, 2025
முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு 27% போனஸ்!

முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக C.I.T.U. தொழிற்சங்கத்திற்கும், முந்திரி ஆலை நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டு, கடந்தாண்டு போன்று இந்த ஆண்டும் 20% போனஸ், 2% ஊக்கத்தொகை, 5% விடுப்பு கால ஊதியம் என மொத்தம் 27% போனஸ் வழங்க நிர்வாகத்தினர் முன் வந்தனர் என T.N. முந்திரி பருப்பு C.I.T.U தொழிற்சங்க பொதுச்செயலாளர் சிங்காரன் கூறினார்.
News August 22, 2025
குமரி: மருமகனைக் கொன்ற மாமனார் கைது!

மயிலாடி, சிபின்(25) என்பவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு சிபினிடம் சண்டையிட்டு, பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். நேற்று(ஆக.21) மனைவியை அழைத்து வர சிபின் சென்றபோது ஏற்பட்ட தகராறில், சிபினின் மாமனார் ஞானசேகரன் மாடியில் இருந்து ஹாலோ பிளாக் கல்லை தூக்கி சிபின் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிபின் உயிரிழந்தார். இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசார் ஞானசேகரனை கைது செய்தனர்.