News April 8, 2024
பேராவூரணியில் உலக சாதனை நிகழ்வு

பேராவூரணியில் சமூக ஆர்வலரான தக்ஷிணாமூர்த்தி 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென தனது ஆள்காட்டி விரலை பின்புறமாக மடக்கி உலக சாதனை நிகழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவன அதிகாரி நாகராஜன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 82 வினாடிகளிலேயே 100 தடவை ஆள்காட்டி விரலை மடக்கி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
Similar News
News December 31, 2025
தஞ்சாவூர்: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News December 31, 2025
தஞ்சை: 21,371 பேருக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 503 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது 18 லட்சத்து 92 ஆயிரத்து 58 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், உரிய தகவல்களை அளிக்காத 21,371 பேருக்கு வாக்குப் பதிவு அலுவலர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று நோட்டீஸ் வழங்குகின்றனர்.
News December 31, 2025
தஞ்சை: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இத பண்ணுங்க!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க!


