News August 22, 2025

கள்ளக்குறிச்சி: குழந்தை திருமணம்; கணவர் மீது போக்சோ

image

உளுந்தூர்பேட்டை அருகே 17 வயது பெண் தனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சரத்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஆண்டு குழந்தை திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஆகஸ்ட்-1ஆம் தேதி சிறுமிக்கு இரட்டை குழந்தை பிறந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சரத்குமார் மீது உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று வழக்குபதிந்தனர்.

Similar News

News March 4, 2026

கள்ளக்குறிச்சி: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

கள்ளக்குறிச்சி மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 4, 2026

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆபீசில் முக்கிய ஆலோசனை!

image

வீரசோழபுரம் பகுதியில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வனத்துறையின் சார்பில் நேற்று கூட்டம் நடைபெற்றது. பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டிற்கான இலக்கு நிர்ணய கூட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 4, 2026

தியாகதுருகத்தில் துடிதுடித்து பலி!

image

தியாகதுருகம்: சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (33). நேற்று முன்தினம் சொந்த வேலையாக கள்ளக்குறிச்சி வந்த அவர், பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது நாகலூர் அரசு பள்ளி அருகே சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறிஇறங்கிய போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!