News August 22, 2025
தஞ்சை அருகே குளத்தில் மிதந்த பிணம்

திருவோணம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தளிகை குளத்தில் வாலிபர் ஒருவரது சடலம் மிதந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியைடந்த மக்கள் திருவோணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் இறந்த வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம், கல்லாக்கோட்டை புதுவயல் பகுதியை பெரியசாமி (33) என்பது தெரிய வந்தது.
Similar News
News March 13, 2026
தஞ்சை ரயில் நிலையத்தில் கூடுதல் பொது மேலாளா் ஆய்வு

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா் நேற்று வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இதில், ரூ.15 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் நடைமேடை, முன்பதிவு மையம், முகப்பு சீரமைப்பு, நுழைவுவாயில், பூங்கா அமைத்தல், குளிரூட்டப்பட்ட பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட பணிகளைக் கூடுதல் பொது மேலாளா் பாா்வையிட்டாா்.
News March 13, 2026
பெட்ரோல் குறித்து தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் சீராக இருப்பதால், எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து திறந்து இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் பீதியில் பெட்ரோல், டீசலை வாங்க ஒரே நேரத்தில் குவிய வேண்டாம் எனவும், வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.