News August 22, 2025
புத்துணர்வூட்டும் புதினா தேநீர்!

ஹெர்பல் டீ வகைகளில் முக்கியமானது புதினா தேநீர். பிரெஷ் புதினா இலைகள் (அ) வெயி்லில் உலர்த்திய இலைகள் கொண்டு புதினா தேநீர் தயாரிக்கலாம். *தினமும் தேனுடன் கலந்து அருந்துவதால் சரும பாதிப்புகளை வெகுவாக குறைக்கலாம். *புதினாவின் மணமும் சுவையும், இதனை அருந்தும்போது நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளி்க்கும். *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், முகச் சுருக்கங்கள் போக்கி இளமை தோற்றம் பெற உதவும். SHARE IT
Similar News
News March 4, 2026
இந்தி பெயருக்கு அதிகாரிகளே காரணம்: தமிழிசை

திருச்சி ரயில் நிலையத்தின் புதிய நுழைவாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என பெயரிடப்பட்டுள்ளதற்கு <<19295250>>CM ஸ்டாலின்<<>> உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியில் உள்ள பெயரை தமிழில் மாற்ற ரயில்வே துறை அமைச்சருக்கு தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். அதிகாரிகள் செய்த தவறுக்கு மத்திய அரசு இந்தியை திணிப்பதாக குற்றம்சாட்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 4, 2026
தவெக கூட்டத்தில் சங்கீதா.. வைரலாகும் PHOTO

தஞ்சையில் நடந்த தவெக கூட்டத்தில் விஜய் – சங்கீதா இருவரும் இருக்கும் போட்டோவை ஒருவர் காண்பித்தது வைரலாகிறது. விவகாரத்து பற்றி இதுவரை மெளனம் கலைக்காத விஜய் பற்றி ஏற்கெனவே விமர்சனங்கள் இருக்கும் நிலையில், இதுபோன்று நடந்துள்ளது. மேலும், இக்கூட்டத்தில் <<19295194>>பெண் பாதுகாப்பு<<>> பற்றி விஜய் பேசாததற்கு, தனது தனிப்பட்ட வாழ்க்கை சிக்கலே காரணம் என்றும் SM-ல் சிலர் கூறி வருகின்றனர்.
News March 4, 2026
பாஜகவின் கொட்டமும், ஆணவமும் கூடுகிறது: CM

இந்தித் திணிப்பு வெறியில் பாஜக எல்லை மீறிச் செல்வதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். <<19294297>>திருச்சி மண்டல ரயில்வே<<>> அலுவலக நுழைவு வாயிலில் இந்தி, EPFO அலுவலகத்துக்கு ‘பவிஷ்ய நிதி பவன்’ என்ற பெயர், நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் ‘ஜல் சக்தி’ என இந்தி திணிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். கூடிக்கொண்டே செல்லும் பாஜகவின் ஆணவத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.


