News August 22, 2025
CINEMA ROUNDUP: 27-ம் தேதி வெளிவரும் ‘LIK’ டீசர்!

★பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ படத்தின் First Punch வரும் 27-ம் தேதி வெளியாகிறது. படம் அக். 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
★அசோக் செல்வனின் ‘18 Miles(தாரணா)’ படத்தின் கிளிம்ப்ஸ் இன்று வெளியாகிறது.
★மலையாள நடிகர் ஷேன் நிகம் நடிக்கும் ‘பல்டி’ படத்தில் இருந்து செல்வராகவனின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது.
★பெரும் வரவேற்பை பெற்ற ‘தலைவன் தலைவி’ படம் அமேசான் பிரைம் OTT-ல் வெளியானது.
Similar News
News August 22, 2025
முகேஷ் அம்பானியின் தாயார் ஹாஸ்பிடலில் அனுமதி

முகேஷ் அம்பானியின் தாயாரும், மறைந்த திருபாய் அம்பானியின் மனைவியுமான கோகிலாபென் அம்பானி(91), உடல்நலக் குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், ஹெலிகாப்டர் மூலம் தெற்கு மும்பையிலுள்ள HN ரிலையன்ஸ் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
News August 22, 2025
அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை: ஐகோர்ட்

நாளை சென்னை கூவத்தூரில் நடைபெறும், அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு <<17481538>>தடை கோரி<<>>, செய்யூர் MLA பனையூர் பாபு வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தடையில்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், நிகழ்ச்சியின் போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
News August 22, 2025
இனி பெண்களுக்கு மாதம் ₹5,000?… FACT CHECK

கிராம மகள் திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பில் நாட்டில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு மாதம் ₹5,000 வழங்கப்பட உள்ளதாக செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய தகவல் சரிபார்ப்பகம்(PIB Fack Check) விளக்கம் அளித்துள்ளது. அதில், ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனல் மூலம் பரப்பப்பட்ட இந்த தகவல் பொய்யானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 8799711259 வாட்ஸ்அப் எண், factcheck@pib.gov.in மெயில் மூலம் உண்மையை அறியலாம்.