News August 22, 2025

Dream 11 கேமுக்கு தடை

image

ஆன்லைன் கேமிங் மசோதா-2025 நிறைவேறிய நிலையில், Dream 11 கேம் நிறுத்தப்படும் என டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பணம் வைத்து விளையாடும் அனைத்து வகை கேம்களையும் நிறுத்தப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. FanCode, DreamSetGo, மற்றும் Dream Game Studios ஆகியவை மட்டும் செயல்படும். 2024-ல் டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஈட்டிய ₹9,600 கோடி வருமானத்தில் 90% Dream 11-ல் இருந்தே கிடைத்ததாம்.

Similar News

News March 20, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் சரிவு!

image

மத்திய கிழக்கு நாடுகளில் போர் 3-வது வாரத்தை எட்டிய நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று பல மடங்கு சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் தங்கம் $240 (₹20,160) குறைந்து $4,650-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் 1 அவுன்ஸ் $4 குறைந்து $72-ஆக உள்ளது. சென்னையில், தங்கத்தின் விலை நேற்று <<19426101>>சவரனுக்கு ₹5,360<<>> குறைந்த நிலையில் இன்றும் பெரியளவில் குறைய வாய்ப்புள்ளது.

News March 20, 2026

தந்தை ஆனார் RCB கேப்டன்❤️❤️

image

RCB அணியின் கேப்டன் ரஜத் படிதார் – குஞ்சன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ம.பி.யின் இந்தூர் பகுதியைச் சேர்ந்த படிதார், 2022-ல் குஞ்சனைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு குழந்தை பிறந்த அதேநாள் RCB அணியின் மென்டர் <<19424867>>தினேஷ் கார்த்திக்கும்<<>> 3-வது குழந்தை பிறந்துள்ளது. இதைவிட சுவாரஸ்யம் என்னவென்றால் இருவருமே(DK, Patidar) ஜூன் 1 தேதி பிறந்தவர்கள்.

News March 20, 2026

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா CPM?

image

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளுக்கு கீழ் தருவதை CPM ஏற்க மறுக்கிறது. இதுதொடர்பாக திமுகவும், CPM-மும் மாறிமாறி பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனிடையே அக்கட்சியின் மாநிலக் குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 5 தொகுதிகளை ஏற்று திமுக கூட்டணியில் தொடர்வதா, அல்லது தவெகவுடன் கூட்டணிக்கு செல்லலாமா என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!