News August 22, 2025
தவெக முதலில் காங்.,ஐ எதிர்க்க வேண்டும்: சீமான்

மன்னர் ஆட்சி என சொல்லும் விஜய் முதலில் காங்கிரஸை எதிர்க்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். தவெக மாநாடு குறித்து பேசிய அவர், விஜய் நடத்திய 2-வது மாநில மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் இருந்தன. அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, EPS படங்கள் இடம்பெறுமா என கேட்டார். விஜய்யின் பின்னால் திரளுபவர்கள் நண்பா, நண்பிகளாக இருக்கலாம். ஆனால் தனக்கு பின்னால் இருப்பவர்கள் தம்பி, தங்கைகளாக இருப்பதாக கூறினார்.
Similar News
News March 13, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 13, மாசி 29 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: தசமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News March 13, 2026
அதிமுகவிடம் 10 இடங்களை கேட்கும் ஜான் பாண்டியன்

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக விரைவில் தொடங்கும் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். அதிமுகவிடம் 10 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகமாக முடிவு எட்டப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், NDA கூட்டணிக்கு விஜய் வருவார் என்பது வதந்தி என்றும் அவர் தங்கள் கூட்டணிக்கு உறுதியாக வரமாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 13, 2026
மார்ச் 13: வரலாற்றில் இன்று

*1921 – மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது. *2008 – தங்கத்தின் விலை நியூயார்க்கில் முதல் தடவையாக அவுன்சுக்கு 1,000-ஐ தாண்டியது. *1980 – இந்திய அரசியல்வாதி வருண் காந்தி பிறந்த தினம். *1982 – இசையமைப்பாளர் தர்புகா சிவா பிறந்த தினம். *1994 – இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் பிறந்த தினம் *2015 – தமிழ் எழுத்தாளர் தி.சு.கிள்ளிவளவன் நினைவு தினம்.


