News August 22, 2025
இணையத்தில் வைரலாகும் ஜான்வி கபூர் போட்டோஸ்

80-களில் தமிழில் ஜாம்பவான் நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. இவரது மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தியிலும், தெலுங்கிலும் கவனிக்கதக்க நடிகையாக வளர்ந்து வருகிறார். விரைவில் அவர் தமிழ் சினிமாவிலும் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் அண்மையில் எடுத்த போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை மேலே கொடுத்துள்ளோம் Swipe செய்து பார்க்கவும்.
Similar News
News March 21, 2026
19 ஆண்டுகள்.. உச்சம் தொடும் ‘கிங்’ கோலி!

2008-ம் ஆண்டு முதல் IPL-ல் விளையாடி வரும் கோலி அனைத்து சீசனிலும் ஒரே அணிக்காக விளையாடிய வீரர், அதிக சதங்கள் அடித்தவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். அதே நேரத்தில் தற்போது அவர் மற்றொரு சாதனையை நெருங்கி உள்ளார். இன்னும் 339 ரன்களை அடித்தால், IPL தொடரில் 9,000 ரன்களை விளாசப்போகும் முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். இதுவரை கோலி, 267 போட்டிகளில் விளையாடி 8,661 ரன்களை அடித்துள்ளார்.
News March 21, 2026
ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் இனி 8 மணிநேரப் பணி

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கான 12 மணிநேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பெண் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஹாஸ்பிடல்களில் தனி ஓய்வறை & கழிப்பறை வசதியை பயன்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. உயிர்காக்கும் ஊழியர்களுக்கு 12 மணிநேர வேலைப்பளுவால் தூக்கமின்மை, உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதாக வழக்கில் கூறப்பட்டிருந்தது.
News March 21, 2026
BREAKING: தங்கம் விலை பெரிய அளவில் குறைந்தது

தங்கம் விலை நேற்று உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. இதன்படி, 1 கிராம் ₹330 குறைந்து ₹13,620-க்கும், 1 சவரன் ₹2,640 குறைந்து ₹1,08,960-க்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை குறைந்து வருவதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


