News August 22, 2025
அரசியல் கூட்டம் அல்ல, நடிகரை பார்க்க வந்த கூட்டம்: தமிழிசை

TVKவின் 2-வது மாநில மாநாட்டில் விஜய் பேசுகையில், கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக எனவும் தெரிவித்தார். இதுபற்றி பேசிய தமிழிசை, விஜய்யின் மாநாடு அரசியல் கூட்டம் போல் இல்லை என்றும், ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்டம் போல் உள்ளதாகவும் கூறினார். கொள்கை எதிரி பாஜக என்று கூறும் விஜய், தனது கொள்கையை கூறவில்லை என்றும், பாஜகவை விமர்சிக்கும் விஜய் காங்கிரஸை விமர்சிக்காதது ஏன் எனவும் கேட்டார்.
Similar News
News March 6, 2026
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட பாமக தலைவர் மனு தாக்கல்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 05), அதிமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட பாமகவுக்கு ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.இதில், பாமக சார்பில் போட்டியிட,பாமக தலைவர் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில், அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News March 6, 2026
BREAKING: கவர்னர் RN ரவி மாற்றம்!

தமிழக கவர்னராக இருந்த RN ரவி மேற்குவங்க கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகருக்கு தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்க ஆளுநராக இருந்த <<19306734>>ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா<<>> செய்த நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
News March 6, 2026
PhonePe-ல் பயோமெட்ரிக் முறை

UPI பேமெண்ட்க்கு பயோமெட்ரிக் முறையை PhonePe அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை PIN மட்டுமே செயல்பாட்டில் இருந்த நிலையில், இனி Fingerprint அல்லது Face recognition வைத்து பேமெண்ட் செய்யலாம். இந்த பயோமெட்ரிக் முறை ₹5000 வரை பரிவர்த்தனைக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. உங்களிடம் PhonePe செயலி இருந்தால் உள்ளே சென்று பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி பாருங்க.


