News August 22, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News March 14, 2026
FLASH: தங்கம் விலை ₹2,880 குறைந்தது

மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கடந்த வாரத்தில் ஏறுமுகத்திலிருந்த தங்கம் விலை, சரிவுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த வார இறுதியில் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹15,050-க்கு விற்பனையானது. கடந்த 11-ம் தேதி ₹15,120 ஆக உயர்ந்தது. அதன் பின்னர் சரசரவென சவரனுக்கு ₹2,880 குறைந்து தற்போது ₹1,18,080-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரிய சரிவை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 14, 2026
வெயிலால் அதிகரிக்கும் சின்னம்மை.. தடுக்க டிப்ஸ்!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் பலருக்கும் சின்னம்மை பரவுகிறது. சில முன்னெடுப்புகள் மூலம் அதனைத் தடுக்க முடியும். *உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அதிகப்படியான தண்ணீர், இளநீர் மற்றும் மோர் குடிக்க வேண்டும். *கம்பு கூழ், பழைய சாதம், வெள்ளரிக்காய் போன்ற உடல் சூட்டைத் தணிக்கும் உணவுகளைச் சேர்க்கவும். *அதிக காரம், எண்ணெய் பலகாரங்கள், அசைவ உணவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. SHARE IT.
News March 14, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு.. சலுகை அறிவித்தது தமிழக அரசு

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின் அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்களுக்கு தமிழக அரசு மானியம் அறிவித்துள்ளது. சிலிண்டர் பிரச்னை உள்ளவரை ஹோட்டல்கள், டீ கடைகளுக்கு மின்சாரம் யூனிட்டுக்கு ₹2 மானியம் வழங்கப்படும் என்றும், வீடுகளில் சமைத்து உணவு விற்போருக்கும் இந்த மின் கட்டண சலுகை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


