News August 22, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
Similar News
News August 22, 2025
மயிலாடுதுறை: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <
News August 22, 2025
மயிலாடுதுறை: ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து அங்கிருந்த மருத்துவ அலுவலர்களிடம் நேரடியாக கேட்டறிந்தார். மேலும் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து பார்வையிட்டார்.
News August 22, 2025
மயிலாடுதுறை: கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மாணவர்களிடம் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து நேரடியாக அவர் கேட்டறிந்தார். பின்னர் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து நேரடியாக பார்வையிட்டார்.