News August 22, 2025
கூட்டுறவு துறை வேலை வாய்ப்புக்கு இவலச பயிற்சி

திருவாரூர் ஆட்சியர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாடு கூட்டுறவு துறையால் அறிவிக்கப்பட்டுள்ள உதவியாளர் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு உதவிடும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் செப்.1ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 22, 2025
திருவாரூர்: மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

வலங்கைமான், இனாம்கிளியூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43) விவசாய தொழிலாளி, சம்பவத்தன்று இவரது வீட்டில் மின் விளக்குகள் எரியவில்லை என தெரிகிறது. இதனால் ரமேஷ், வீட்டின் மின் இணைப்பை நிறுத்தாமல் பழுதை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரமேசை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
News August 21, 2025
திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஆக.21) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி எண்களை அழைக்கலாம்.
News August 21, 2025
திருவாரூர்: சொந்த தொழில் தொடங்க வாய்ப்பு

திருவாரூர் இளைஞர்களே.. சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.