News August 22, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சியில் நாளை (ஆக.22) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமானது அரியமங்கலம் பிரகாஷ் திருமண மண்டபம், பாலகிருஷ்ணம்பட்டி பி.மேட்டூர் சமுதாயக்கூடம், லால்குடி சப்தகிரிவரர் கோவில் மண்டபம், துறையூர் ராஜ் திருமண மண்டபம், மண்ணச்சநல்லூர் காமாட்சி அம்மன் திருமண மண்டபம், மருங்காபுரி முத்தாழ்வார் பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 22, 2025
திருச்சி: சிலிண்டர் புக் பண்ண ஈஸியான வழி

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!
News August 22, 2025
திருச்சி: உதவி மைய எண்கள் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் 0431-3524200, 83001 13000 என்ற டோல் ஃப்ரீ எண்களில் தொடர்பு கொண்டு குடிநீர் சேவை, தெருவிளக்கு பழுதுகள், திடக்கழிவு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவிக்கலாம். இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
ஸ்ரீரங்கம் கோயிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

தமிழகத்தில் முக்கியமான 12 கோவில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய இரண்டு கோயில்களிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.