News April 8, 2024
சென்னை காவல் ஆணையரகம் எச்சரிக்கை

பிரதமா் மோடி வருகையையொட்டி சென்னை தியாகராய நகா், காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. காவல் துறையின் தடையையும் மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று(ஏப்.8) பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 144 தடை சட்டத்தின் கீழ் டிரோன்கள் உள்ளிட்ட ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு.
Similar News
News January 14, 2026
சென்னையில் பிரம்மாண்ட வண்ணமீன் திருவிழா!

தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை வில்லிவாக்கம் சிவசக்தி நகரில் “வண்ணமீன் வர்த்தகத் திருவிழா” நடைபெறவுள்ளது. ஜனவரி 15 முதல் 18 வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த விழாவிற்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேசத் தரத்திலான வண்ணமீன் விற்பனை மையங்கள், நீர்வாழ் காட்சியகம் மற்றும் 150-க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெறுகின்றன.
News January 14, 2026
சென்னை: பொங்கலை குறிவைத்து கலப்படம் இனிப்பு!

சென்னையில் பொங்கலை குறிவைத்து கலப்படம் இனிப்பு விற்பனையில் பிரபல இனிப்பு கடாயில் வனஸ்பதி பயன்பாடு எனப் புகார் எழுந்துள்ளது. நெய்க்கு பதிலாக பாதிக்குப் பாதி வனஸ்பதி பயன்படுத்தப்பட்டிருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும் 500 டன் அளவுக்கு இனிப்புகள் வனஸ்பதி மூலம் தயாரித்து ரூ.5 கோடி அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
News January 14, 2026
சென்னை: லஞ்சம் கேட்டால் உடனே Call!

சென்னை மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இந்த சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-22321045) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!


