News August 22, 2025
வேலூர் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் கலந்து கொண்டு அறிவுரை வழங்க உள்ளார். எனவே விழா குழுவினர்கள் இதில் கலந்து கொள்ள அழைத்துள்ளனர்.
Similar News
News February 14, 2026
வேலூரில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

வேலூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <
News February 14, 2026
வேலூரில் பைக் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <
News February 14, 2026
வேலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – கலெக்டர் தகவல்!

வேலூர் மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 21-ம் தேதி சனிக்கிழமை வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் நபர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.


