News August 22, 2025
வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை ஆகஸ்ட் 22 காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்குகிறார். இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 30, 2026
வேலூர் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நோட்டீஸ்

வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு மாதாந்திர வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும், அதிக வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு ‘சீல்’ வைக்கவும் மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் உத்தரவிட்டார். அதன்படி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட நேதாஜி மார்க்கெட், சாரதி மாளிகையில் உள்ள 60 கடைகளுக்கு வாடகை பாக்கி செலுத்தும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
News January 30, 2026
வேலூர்: 3 இடங்களில் மாடு விடும் திருவிழா

வேலூர் மாவட்டத்தில் இன்று ஜனவரி 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் 3 இடங்களில் மாடு விடும் திருவிழா நடைபெற உள்ளது. அதன்படி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழ்ப்பள்ளிப்பட்டு, கே.வி.குப்பம் காவனூர், அணைக்கட்டு தாலுகா பாக்கம்பாளையம் ஆகிய கிராமங்களில் மாடு விடும் திருவிழா நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
News January 30, 2026
ALERT: வேலூரில் மின் தடை: உங்க ஏரியா இருக்கா?

வேலூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (ஜன.31) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி புதிய பேருந்து நிலையம், தோட்டப்பாளையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, அண்ணா சாலை, அப்துல்லாபுரம், கிருஷ்ணா நகர், பிஷப் டேவிட் நகர், கஸ்பா, கோணவட்டம், கொசப்பேட்டை, ஓல்ட் டவுன் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.


