News August 21, 2025
PF கருணைத் தொகை ₹15 லட்சமாக உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், EPF-லிருந்து வழங்கப்படும் கருணைத் தொகை ₹15 லட்சமாக உயர்த்தப்படும் (ஏப்ரல் 1, 2025 முதல்) என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இது ₹8.8 லட்சமாக இருந்தது. இத்தொகை இறந்தவரின் சட்டரீதியான குடும்பத்தினர் / வாரிசுகளிடம் வழங்கப்படும். மேலும், இத்தொகை ஏப்ரல் 1, 2026 முதல் ஆண்டுக்கு 5% என்ற அளவில் உயர்த்தப்படும் எனவும் EPFO அறிவித்துள்ளது.
Similar News
News January 17, 2026
கனவில் பாம்பு வருதா? இதுதான் அர்த்தம்

சிலருக்கு பாம்பு அடிக்கடி கனவில் வந்து கொண்டே இருக்கும். இதற்கு அர்த்தம் இருப்பதாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. ராகு தசை, கேது தசை நடக்கும்போது, அப்படி கனவு வருமாம். ஒற்றை நல்ல பாம்பை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்புகளை கண்டால் நன்மைகள் நடக்கும். பாம்பு கடித்துவிட்டதாக கனவு வந்தால் பணம் கொட்டுமாம். உங்க கனவுல பாம்பு வந்திருக்கா?
News January 17, 2026
நெருக்கமான காட்சிக்கு NO சொன்ன தமன்னா

நடிகை தமன்னா ஒரு நேர்காணலில், தனது திரை வாழ்க்கையின் தொடக்கத்தில் தான் சந்தித்த சிரமங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். மூத்த நடிகர்களுடன் நெருக்கமாக காதல் காட்சிகளில் நடிக்க கேட்டபோது, எனக்கு சங்கடமாக இருந்ததால் மறுத்துவிட்டேன். இதனால் இயக்குநர், கதாநாயகியை மாற்றுமாறு எனக்கு அழுத்தம் கொடுக்க முயன்றார். இருப்பினும், நான் சம்மதிக்கவில்லை. பின்னாளில் அவரே மன்னிப்பு கேட்டதாக நினைவு கூர்ந்துள்ளார்.
News January 17, 2026
ராசி பலன்கள் (17.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


