News August 21, 2025
பெற்றோருக்கு எழுதிய லெட்டர்; அதிகாரியின் Nostalgic Moment

பதிவுத் தபால் சேவை செப்.1 முதல் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் தனது தபால் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் Ex.வான்படை அதிகாரி ஒருவர். 1972-ல் புனேவின் தேசிய டிபென்ஸ் அகாடமியில் இருந்து, தன்னுடைய பெற்றோருக்கு கடிதம் அனுப்ப ’கேடட்ஸ் மெஸ்’ எனும் தபால் பெட்டியை பயன்படுத்தியிருக்கிறார். இதனை நினைவுகூர்ந்த அவர் அப்பெட்டி கடிதங்களின் சின்னமாக இன்றும் நிலைத்து நிற்கிறது எனக் கூறி நெகிழ்ந்துள்ளார்.
Similar News
News August 22, 2025
நோய் எதிர்ப்பு சக்தியை தரும் மஞ்சள் பால்

சூடான பாலில் மஞ்சள் கலந்து, தேவையான அளவு கருப்பட்டி கலந்து அவ்வப்போது குடித்து வந்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
➤முதுகெலும்பு, மூட்டுகளை வலுப்படுத்த உதவும்
➤வாத பிரச்சனைகளை சரிசெய்ய உதவும்
➤புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்
➤சருமம் பளபளப்பாகும்
➤நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமாகும்
News August 22, 2025
ஆன்லைன் கேமிங் மசோதா சமூகத்தை காக்கும்: PM மோடி

ஆன்லைன் கேமிங் மசோதா-2025, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதாக PM மோடி அறிவித்துள்ளார். இது கேமிங், புத்தாக்கம் மற்றும் படைப்பாக்க மையமாக இந்தியாவை உருவாக்கும் அரசின் உறுதியை காட்டுவதாக தெரிவித்த அவர், இ-ஸ்போர்ட்ஸ், ஆன்லைன் சோஷியல் கேம்ஸ் ஆகியவற்றை ஊக்குவிக்கும் அதே நேரம், பணத்தை வைத்து ஆடும் ஆன்லைன் கேம்களின் கெடு விளைவுகளில் இருந்து சமூகத்தை காக்கவும் உதவும் என்றார்.
News August 22, 2025
விஜய்க்கு ஆசை இருக்கு, செயல் இல்லை: திமுக விமர்சனம்

இன்று தவெக மாநாட்டில் விஜய் தன் பேச்சில், திமுகவை கடுமையாக தாக்கினார். இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் TKS இளங்கோவன், திமுகவினரை திட்டினால் தான் முதல்வராக முடியும் என விஜய் நினைப்பது கற்பனை என்று விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று கூட விஜய்க்கு தெரியவில்லை என்ற அவர், முதல்வராக ஆசைப்படும் விஜய்யிடம் பேச்சு இருக்கிறது, ஆனால் செயல் இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.