News August 21, 2025
தேனி: அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

தேனி மக்கள் கவனத்திற்கு, நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனை தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவர். இந்த தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News November 14, 2025
தேனி: தலைவலியால் ஒருவர் விஷமருந்தி தற்கொலை.!

ஓடைப்பட்டி அருகே கரிச்சிபட்டியை சேர்ந்தவர் முருகன் (47). இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விதத்தின் காரணமாக தீராத தலைவலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் 2 தினங்களுக்கு முன்பு முருகன் விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (நவ.13) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு.
News November 14, 2025
தேனி: ஜூஸ் வியாபரி தற்கொலையில் மர்மம்

தஞ்சாவூர், பள்ளிகொண்டான் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (34). இவர் கம்பத்தில் 4 வருடங்களாக ஜுஸ் கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு திருமணமகாத நிலையில் கடையின் அருகே வேலை செய்யும் பொம்முதாய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத பொழுது சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் போலீசார் வழக்கு (நவ.13) பதிந்து விசாரணை.
News November 14, 2025
தேனி: நகராட்சி பணியாளரை கத்தியால் குத்தியவர் கைது

பெரியகுளம் தென்கரை பகுதியில் நேற்று (நவ.13) பெரியகுளம் நகராட்சி சார்பில் சாலை பணி நடைபெற்று உள்ளது. அங்கு வந்த காமராஜ் (27) என்பவர் பணியில் இருந்தவர்களிடம் மாமுல் கேட்டு தகராறு செய்துள்ளார். அதனை நகராட்சி தற்காலிக பணியாளர் தினேஷ் தட்டி கேட்ட நிலையில் அதனால் ஆத்திரமடைந்த காமராஜ், தினேஷை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.


