News August 21, 2025
3 வீரர்களை கைவிடும் மும்பை இந்தியன்ஸ்?

IPL 2025 சீசன், MI அணியை சற்றே சோதித்தது எனலாம். Playoff வரை சென்றாலும், அதற்கான போராட்டம் கடுமையாக இருந்தது. இதற்கு அணியில் ஏற்பட்ட சில மாற்றங்களும் காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில், 2026 IPL ஏலத்தில் தீபக் சாஹர், ரீஸ் டோப்ளே, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அவர்களின் குறைவான பங்களிப்பே காரணமாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News August 22, 2025
விஜய்க்கு ஆசை இருக்கு, செயல் இல்லை: திமுக விமர்சனம்

இன்று தவெக மாநாட்டில் விஜய் தன் பேச்சில், திமுகவை கடுமையாக தாக்கினார். இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் TKS இளங்கோவன், திமுகவினரை திட்டினால் தான் முதல்வராக முடியும் என விஜய் நினைப்பது கற்பனை என்று விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று கூட விஜய்க்கு தெரியவில்லை என்ற அவர், முதல்வராக ஆசைப்படும் விஜய்யிடம் பேச்சு இருக்கிறது, ஆனால் செயல் இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.
News August 22, 2025
ராசி பலன்கள் (22.08.2025)

➤ மேஷம் – போட்டி ➤ ரிஷபம் – முயற்சி ➤ மிதுனம் – தடங்கல் ➤ கடகம் – அன்பு ➤ சிம்மம் – உயர்வு ➤ கன்னி – சாந்தம் ➤ துலாம் – வரவு ➤ விருச்சிகம் – கடன்தீரல் ➤ தனுசு – மேன்மை ➤ மகரம் – அமைதி ➤ கும்பம் – புகழ் ➤ மீனம் – ஆதரவு.
News August 21, 2025
TN-க்கு மோடி செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்: விஜய்

PM மோடி மற்றும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்த விஜய் TN மக்களுக்காக இரு முக்கிய கோரிக்கைகளையும் வைத்துள்ளார். தமிழக மக்களுக்கு நன்மை செய்வதாக PM மோடி நினைத்தால், முதலில் கச்சத்தீவை மீட்டு கொடுங்கள் என்றார். மேலும், நாள்தோறும் நீட் தேர்வால் நடக்கும் அவலங்களை பேசவே அச்சமாக இருப்பதாக கூறிய அவர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.