News August 21, 2025
ED ரெய்டால் DMK – BJP கூட்டணி அமையலாம்: அருண்ராஜ்

திமுகவை உருவாக்கிய அண்ணா, கடனில் வாழ்ந்து தனது கடைசி மூச்சை விட்டார் என கூறிய அருண்ராஜ், திமுகவின் தற்போதைய தலைவர்கள் ஊழலில் வாழ்வதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை மாநாட்டில் பேசிய அவர், பிளவுவாத அரசியலை செய்யும் திமுக அரசு மக்களை ஏமாற்றி நாடகம் நடத்துகிறது என்றார். மேலும், TN-ல் அடுத்து ED ரெய்டு நடந்தால் பயந்துபோய் திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் அமைக்கும் என்றார். உங்கள் கருத்து?
Similar News
News January 22, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று ஜன. 22 இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதால், ஜனவரி மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், ரேஷன் பொருள்களை வழங்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்படும் என கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், எந்த ரேஷன் கடையிலும் பொதுமக்கள் தங்களுக்கான ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். SHARE IT.
News January 22, 2026
திமுகவில் போட்டியிடவில்லை: நடிகர் SV சேகர் அறிவித்தார்

திமுகவுக்கு ஆதரவாக பேசிவரும் நடிகர் SV சேகர், மயிலாப்பூர் தொகுதியில் களமிறங்க முயல்வதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில், தேர்தல் அரசியலிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பும், பாஜகவிலிருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பும் விலகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக பிரசாரம் செய்வதோடு, CM ஸ்டாலினுக்கு துணை நிற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.


