News April 8, 2024
ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டுவசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, 3 மாதத்தில் முடிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பெரியசாமி தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது கீழமை நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 12, 2025
வீட்டுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கிய CM

வீட்டுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் பயனாளிகளின் வீட்டுக்கே சென்று ஸ்டாலின் பொருள்களை வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம் 21.70 லட்சம் முதியோர், மாற்றுதிறனாளிகள் பயன்பெற உள்ளனர். இதனை ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைமுறைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
News August 12, 2025
தங்கம் விலை 2 நாளில் ₹1200 குறைந்தது

கடந்த வாரம் முழுவதும் ஏறுமுகத்தில் இருந்த ஆபரணத் தங்கம், இந்த வாரம் இறங்கு முகத்தில் இருக்கிறது. குறிப்பாக, வாரத்தின் முதல் நாளான நேற்று சவரனுக்கு ₹560, இன்று ₹640 என 2 நாளில் மொத்தம் ₹1200 குறைந்துள்ளது. இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள நகைப்பிரியர்கள், வரும் நாள்களில் மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கின்றனர். தற்போதைய சூழலும் அப்படிதான் அமைந்திருக்கிறது.
News August 12, 2025
BLA பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவிப்பு

பலூசிஸ்தான் விடுதலைப் படை(BLA) மற்றும் அதன் துணை அமைப்பான மஜீத் படைப்பிரிவை பயங்கரவாத அமைப்புகள் என அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கனிமவளம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என கோரி BLA அந்நாட்டுக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது கவனிக்கதக்கது.