News August 21, 2025
மக்கள் மன்னன், பெரியாரின் பேரன் விஜய் என புகழாரம்

மதுரை, தவெக மாநாட்டு அரங்கில் அக்கட்சியின் சார்பில் 2-வது பாடல் வெளியிடப்பட்டது. அதில், மக்களின் மன்னனே.. பெரியாரின் பேரனே என்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன. 2026 தேர்தலில் தமிழகத்தின் வரலாற்றை மாற்றும் ‘எங்கள் அண்ணன்’ உங்கள் விஜய், உங்கள் விஜய் வரவா என பெரியார், விஜயகாந்த் உள்ளிட்டோரை ஹைலைட் செய்யும் வரிகள் இடம் பெற்றுள்ளன.
Similar News
News February 22, 2026
PM மோடி தந்திரசாலி: வைகோ

வாஜ்பாய் மற்றும் அத்வானி காலத்து பாஜகவுக்கும், தற்போதைய பாஜகவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என வைகோ கூறியுள்ளார். வாஜ்பாய் மதச்சார்பின்மையை மதித்தவர் என கூறிய அவர், PM மோடி தந்திரசாலி, அவர் TN-ஐ ஏமாற்ற பார்க்கிறார் என்றார். மேலும், வந்தே மாதரத்தை அனைவரும் பாடுவதில் சிக்கல் உள்ளது எனவும் இதை கட்டாயமாக்க முயற்சிப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.
News February 22, 2026
இதையெல்லாம் சாப்பிடுறீங்களா? இல்லையா?

➤முத்து சோளம் – உடல் வலிமையை அதிகரிக்கும் ➤தேங்காய் – ஞாபக சக்தியை அதிகரிக்கும் ➤பலாப்பிஞ்சு – சருமம், கண்களை காக்கும் ➤தட்டைக்காய்(காராமணி) – பக்கவாதத்தை தடுக்கும் ➤அவரைக்காய் – ஆக்ஸிஜனை அதிகரிக்கும் ➤மாங்காய் – கொழுப்பை குறைக்கும் ➤நூக்கல் – உடல் எடையை குறைக்கும் ➤மொச்சை – ரத்த கொழுப்பை குறைக்கும் ➤பரங்கிக்காய் – ரத்த அழுத்தத்துக்கு சிறந்தது. நாளையிலிருந்து தினமும் ஒரு காய் சாப்பிடுங்க. SHARE.
News February 22, 2026
திமுகவும் சாதிய வாக்கின் கீழ் உள்ளது: பா.ரஞ்சித்

சாதிய வாக்குகள் வேண்டுமென்றால் சமரசமாகத்தான் இருக்க வேண்டும், இதுதான் தமிழகத்தில் நடக்கிறது என்று பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். சாதிய எதிர்ப்பாளராக இருக்க வேண்டுமென திமுக கூறினாலும், அவர்களும் வாக்கு அரசியலிலேயே உள்ளனர் என்றும் விமர்சித்தார். ஒரு தலித்தால் திமுக, அதிமுக கட்சிகளின் சார்பாக பொதுத் தொகுதிகளில் போட்டியிட முடியவில்லை. ஆனால், நாதக, CPI போன்ற கட்சிகள் அதில் விதிவிலக்கு என்றும் கூறினார்.


