News April 8, 2024

விருதுநகர் அருகே அடித்து கொலை

image

சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியை சேர்ந்த முனியாண்டி என்பவர் இறந்தார். நேற்று அவரது உடலை அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்து சென்றனர்.அதே ஊரை சேர்ந்த கலைமணியை (27) வீரஅபிமன்ன(51),வீர பூபதி(24),மற்றொருவர் சேர்ந்து தாக்கியுள்ளனர். உறவினர்கள் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிக்சைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.சாத்தூர் போலீஸ் விசாரணை.

Similar News

News March 13, 2026

BREAKING விருதுநகர்: 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

image

காரியாபட்டி அரசு துவக்க பள்ளி மாணவர்களை வைத்து ஆசிரியை தனது கடையில் சுத்தம் செய்ய வைத்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து பள்ளியில் கற்றல் கற்பித்தல் பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டதால் இடைநிலை ஆசிரியர் லட்சுமி செட்டிகுளம் துவக்க பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னுத்தாயை மறைக்குளம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News March 13, 2026

விருதுநகரில் பங்குனி பொங்கல் திருவிழா அறிவிப்பு

image

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா மார்ச். 29 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் மார்ச்.15 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்க துவங்குகின்றனர். இதைத் தொடர்ந்து விழா நாட்களில் மகமை மண்டபத்தில் வழிபாடுகள் பூஜைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி பொங்கல் திருவிழா ஏப்.5 அன்றும், ஏப்.6 கயிறு குத்து, அக்னி சட்டி, ஏப்.7 இல் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

News March 13, 2026

விருதுநகர்: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

IDBI வங்கியில் 200 Assistant manager காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, டிகிரி மற்றும் 2 வருட முன் அனுபவம் உள்ளவ வயது 21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ. 48480 – ரூ.85,920 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து மார்ச்19 க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடு உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!