News August 21, 2025

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

image

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து நேற்று (ஆகஸ்ட் 20) 1,00,000 கன அடியாக இருந்தது. அது படிப்படியாக குறைந்து இன்று (ஆகஸ்ட் 21) காலை 8 மணி நிலவரப்படி 30,000 கன அடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து குறைந்தபோதிலும், சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் நான்காவது நாளாக தடை நீடிக்கிறது.

Similar News

News November 14, 2025

குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஆட்சியர் கையெழுத்து

image

தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணி துவக்கி வைத்தார்கள். உடன் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கலந்து கொண்டனர்.

News November 14, 2025

மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய ஆட்சியர்

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர், 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை குழந்தைகள் தினமான இன்று (நவ.14) வழங்கி துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, தருமபுரி, நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை, அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், வழங்கி துவங்கி வைத்தார்கள்.

News November 14, 2025

தருமபுரியில் செவிலியர் வேலை- APPLY HERE

image

தருமபுரி பெண்களே, குமுதா மருத்துவமனையில் செவிலியர் (staff nurse) பணிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. Bsc.Nursing முடித்த, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.10,000 – ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தருமபுரியிலேயே செவிலியர் பணி தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!