News August 21, 2025

BREAKING ஆவியூரில் கடைகளை மூட உத்தரவு

image

பாரப்பத்தில் இன்று தவெக வின் மாநாடு நடைபெற உள்ள நிலையில் இதில் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மாநாட்டு பகுதியின் அருகில் உள்ள ஆவியூரில் உள்ள கடைகளில் மாநாட்டிற்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி தேவையான உபகரணங்களை வாங்குவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளை மறுஅறிவிப்பு வரும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News February 20, 2026

போக்சோ வழக்கில் கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை 

image

சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் காளிராஜன்(56). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு திண்பண்டம் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். சிவகாசி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, காளிராஜனை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று போக்சோ நீதிமன்ற நீதிபதி காளிராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

News February 19, 2026

விருதுநகர் : வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – Apply..!

image

விருதுநகர் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். இங்கு <>க்ளிக்<<>> செய்து பதிவு செய்த மொபைல் எண் Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து முகவரி விவரம் சரிபார்த்து தேவையான ஆவணங்கள் பதிவேற்றி சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க வீடு தேடி புது ரேஷன்கார்டு வந்துவிடும்.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..

News February 19, 2026

விருதுநகர்: பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

image

ராயல் மெளஸி மில்க் டீ மற்றும் நியூ எரா ராயல் மெளஸி மில்க் டீ ஆகிய தளங்களில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவோருக்கு கமிஷன் அடிப்படையில் அதிக பணம் திருப்பி கொடுப்பதாக கூறி ஆசை வார்த்தை காட்டி அதிகமான அளவில் பணம் வசூல் செய்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. இதில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என காவல் ஆய்வாளார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!