News August 21, 2025
தவெக மாநாட்டில் 40 அடி உயர கொடிக்கம்பம்

தவெக மாநாட்டில் புதிதாக 40 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. நேற்று பிற்பகல் <<17463695>>100 அடி உயர கொடிக்கம்பத்தை<<>> கிரேன் கொண்டு நிறுவ முயன்ற போது கீழே விழுந்து சேதமடைந்தது. இதனால் கொடிக்கம்பம் நிறுவும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து மாநாட்டு மேடைக்கு அருகே 40 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவியுள்ளனர். புதிய இடத்தை N.ஆனந்தும், ஆதவ் அர்ஜுனாவும் பார்வையிட்டனர்.
Similar News
News January 17, 2026
திமுக அரசு கொடுத்த பால்கோவா: செல்லூர் ராஜு

அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பால்கோவா கொடுத்து உள்ளது என செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேட்டியளித்த அவர், வரும் தேர்தலில் வாக்குகள் பெறுவதற்காக பொங்கலுக்கு திமுக அரசு பணம் கொடுத்துள்ளது என்றார். மேலும், போதை கலாசாரம் ஒழிய, சட்டம் ஒழுங்கு காக்கப்பட, விலைவாசி குறைய திமுக ஆட்சி விலக வேண்டும் என்பது கனவாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
News January 17, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

நேற்று சரிவைக் கண்ட தங்கம் விலை இன்று(ஜன.17) மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹13,280-க்கும், சவரன் ₹400 அதிகரித்து ₹1,06,240-க்கும் விற்பனையாகிறது. <<18877216>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை 1 அவுன்ஸ்(28) 23 டாலர்கள் குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று உயர்வைக் கண்டுள்ளது.
News January 17, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <


