News August 21, 2025
அதிமுகவிற்கு இரட்டை நிலைப்பாடு சாதாரணமே: CM

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த, மத்திய அரசு கொண்டு வரும் கருப்பு சட்டங்களை திமுக எதிர்க்கும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். PM, CM பதவி பறிப்பு மசோதா, குடியுரிமை திருத்தச் சட்டம், SIR ஆகியவற்றை தாங்கள் எதிர்த்ததாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இரட்டை நிலைப்பாடு என்பது அதிமுகவுக்கு சாதாரணமே என்று CM விமர்சித்துள்ளார்.
Similar News
News January 17, 2026
EPS-ஐ மட்டும் டெல்லிக்கு அழைக்கும் பாஜக!

NDA தேர்தல் வியூகங்களை அதிமுகவை சேர்ந்த சிலர் திமுகவுக்கு பகிர்வதாகவும், அதனை மத்திய உளவுத்துறை விசாரிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. PM மோடியின் மதுரை விசிட் கூட அப்படித்தான் கசிந்ததாகவும், அதனால்தான் சென்னைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், 23-ம் தேதிக்குள் கூட்டணிக் கட்சிகள் மற்றும் பாஜகவுக்கான தொகுதிகளை இறுதி செய்ய EPS-ஐ மட்டும் பாஜக தேசிய தலைமை டெல்லிக்கு அழைத்துள்ளதாம்.
News January 17, 2026
நாட்டின் முக்கிய தொழிலதிபர் காலமானார்

நாட்டின் எஃகு உற்பத்தித் துறையின் ஜாம்பவானும், முக்கிய தொழிலதிபருமான மோகன் லால் மிட்டல்(99) காலமானார். ராஜஸ்தானின் ராஜ்கர் கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பு, தன்னம்பிக்கையால் உயர்ந்தவர். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழில்முனைவோரை உருவாக்கிய உன்னத மனிதரை இழந்துவிட்டோம் என மோகன் லால் மறைவுக்கு PM மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். #RIP
News January 17, 2026
காலை வெறும் வயிற்றில் இத குடிங்க..

காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்துடன், செரிமான மேம்பாடு, முடி வளர்ச்சி, உடல் எடையை குறைக்க, சருமத்தை ஆரோக்கியமாக வைக்க, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கவும் இது உதவுகிறது. இதிலிருக்கும் சத்துக்களை குறைக்கலாம் என்பதால் சர்க்கரை கலந்து குடிக்க வேண்டாம். SHARE.


