News August 21, 2025
செயலற்று கிடக்கும் 13 கோடி ஜன்தன் கணக்குகள்!

நாட்டில் மொத்தமுள்ள 56.03 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளில், ஜூலை 31-ம் தேதி கணக்குப்படி, 13.04 கோடி கணக்குகள்(23%) செயலற்று இருப்பதாக மத்திய இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி தெரிவித்துள்ளார். உ.பி.யில் அதிகபட்சமாக 2.75 கோடி கணக்குகளும், பிஹாரில் 1.39 கோடி கணக்குகளும் செயலற்று உள்ளன. 2 வருடங்களுக்கு எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் வங்கி கணக்கு இருந்தால், அது செயலற்றதாக மாறும் என்பது RBI விதி.
Similar News
News August 21, 2025
இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பாப்போம்!

நியூஸ் படிச்சி படிச்சி டயர்ட் ஆகிட்டீங்களா.. வாங்க உங்க மூளையை சுறுசுறுப்பாக்குவோம். சட்டென பார்த்தால், கடினமாக தெரியும். ஆனால், ஒரே ஒரு டிரிக் தெரிந்து விட்டால் போதும், இது ரொம்ப ஈசி. ஒரே ஒரு சின்ன Hint தரோம். 11 = 20, 12 = 31 என்ற வரிசையில் இந்த எண்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தை கவனித்து பாருங்க. பதில் தெரியும். எத்தனை பேர் கரெக்ட்டா பதில் சொல்றீங்க என பார்ப்போம்? SHARE IT.
News August 21, 2025
சத்தமில்லாமல் சாதனை செய்த விஜய்: N.ஆனந்த்

வடமாவட்டங்களில் மட்டும்தான் விஜய்க்கு செல்வாக்கு எனக் கூறியவர்களுக்கு, மதுரை மாநாட்டின் மக்கள் கூட்டம் பதிலடி கொடுத்துள்ளதாக N.ஆனந்த் கூறியுள்ளார். சத்தமில்லாமல் சாதித்து, கோடிக்கான தாய்மார்களின் அன்பை பெற்ற விஜய், 2026 தேர்தலில் வெற்றிவாகை சூடி, CM நாற்காலியில் அமர்வது உறுதி என சூளுரைத்தார். மேலும், வரும் நாள்களில் தவெகவினர் வியர்வை சிந்தி கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
News August 21, 2025
தவெக கொள்கை தலைவர்களுக்கு மரியாதை

தவெகவின் கொள்கை தலைவர்களான அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோரின் படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு மாநாட்டில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதியின் பெயரில் உறுதிமொழியேற்பு நடைபெற்றது. மாநாட்டை நேரலை காண இந்த <<17473670>>லிங்கை<<>> கிளிக் செய்யுங்கள்.