News August 21, 2025
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது.. TVK புது தீம் சாங்!

மதுரையில் இன்று நடைபெறும் தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்ற பெயரில் தவெகவின் புதிய தீம் சாங் வெளியாகிறது. கொடி பாடலுக்கு இசையமைத்த தமன் தான் இந்த பாடலுக்கும் இசையமைத்திருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. இந்த பாடலில் 1967,1977-ல் திமுக, அதிமுக ஆட்சி அமைத்தது பற்றியும், விஜய்யின் அரசியல் பேச்சும் இடம் பெறும் எனவும் கூறப்படுகிறது.
Similar News
News January 28, 2026
தேமுதிக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்: விஜயபிரபாகரன்

கூட்டணி யாருடன் என முடிவாகாத நிலையில், தேமுதிக இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று விஜயபிரபாகரன் கூறியுள்ளர். நேற்று சிவகாசியில், 2006-ல் சிவகாசி தொகுதியில் தான் தேமுதிக அதிக வாக்குகள் பெற்றதாகவும், மீண்டும் அங்கு உழைக்க தயாராக உள்ளதாகவும் கூறினார். இதனால் அவர் சிவகாசியில் போட்டியிடுவார் என கூறப்படும் நிலையில், தேமுதிக கூட்டணி யாருடன் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் அதிகரித்துள்ளது.
News January 28, 2026
பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தது❤️❤️

இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த சிவா-மனோஜினி தம்பதி 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இதில், 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த மனோஜினி நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். திருமணமான 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய கொடை கிடைத்திருப்பதால் மனோஜினி மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளார்.
News January 28, 2026
குழந்தைக்கு இத சொல்லிக் கொடுத்தீங்களா?

உங்கள் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சரியான விஷயங்களை சொல்லிக்கொடுப்பது அவசியம். 2-3 வயது குழந்தைகள் இந்த அடிப்படையான விஷயங்களை கற்றுக்கொடுங்க.➤மூச்சு பயிற்சிகளை வழங்குங்கள் ➤அவர்களாகவே உடைகளை அணியட்டும் ➤அவர்களுக்கு ஊட்ட வேண்டாம். அவர்களே சாப்பிடட்டும் ➤அவர்கள் போட்ட குப்பையை அவர்களையே சுத்தம் செய்ய சொல்லுங்கள் ➤மன்னிப்பு கேட்க, நன்றி சொல்ல கற்றுக்கொடுங்கள் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.


