News August 21, 2025

கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய மசோதா நிறைவேற்றம்

image

RCB வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தேசிய அளவில் சர்ச்சையானது. இந்நிலையில், 2025 கூட்ட கட்டுப்பாட்டு மசோதாவை கர்நாடக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதன்படி, நிகழ்வின் நோக்கம், எதிர்பார்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, அதற்கேற்றார்போல் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒரு விண்ணப்பமாக அளித்து, பொதுப்பணி உள்ளிட்ட சில துறைகளில் NOC சான்றும் பெற வேண்டும்.

Similar News

News August 21, 2025

Online Gaming மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது

image

ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேறிய நிலையில், இன்று ராஜ்யசபாவில் நிறைவேறியது. இது, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி சட்டமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு ஏற்கெனவே அபராதம், 7 ஆண்டு சிறை தண்டனை உள்ள நிலையில், புதிய மசோதா சட்டமானால் ஆன்லைன் சூதாட்டத்துக்கும் அபராதம், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். உங்கள் கருத்து என்ன?

News August 21, 2025

குங்குமம் கொட்டினால் அபசகுணமா?

image

குங்குமம் கொட்டினால், பெரிய அபசகுணம் என அலறுவார்கள். மேலும் வீட்டுப் பெண்களுக்கு தாலிக்கு ஆபத்து என்றும் நம்பப்படுகிறது. திருமணமான பெண்களின் அடையாளமாக குங்குமம் இருப்பதால், இவ்வாறான கருத்து நிலவுகிறது. குங்குமம் கொட்டுவதால், தீங்கு நடந்ததாக சிலர் சொன்னாலும், அதெல்லாம் Coincidence மட்டுமே. கைதவறினாலும், பசங்க விளையாடும் போது குங்கும சிமிழி கீழே விழுந்தாலும், மனம் சஞ்சலப்பட வேண்டாம்!

News August 21, 2025

BREAKING: தவெக மாநாடு.. விஜய்யின் தொண்டர் மரணம்

image

மதுரை தவெக மாநாட்டுக்கு சென்ற சென்னையை சேர்ந்த பிரபாகர் என்பவர் சக்கிமங்கலம் அருகே மாரடைப்பால் உயிரிழந்தார். ஏற்கெனவே மாநாட்டு அரங்கில் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநாட்டு அரங்கில் 40-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!