News August 21, 2025

விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்த EPS

image

தவெக மாநாட்டு திடலில், அண்ணா, எம்ஜிஆருடன் விஜய் இருப்பது போன்ற பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிதாக கட்சி தொடங்குபவரும் நம் தலைவரை போற்றித்தான் கட்சி தொடங்கவேண்டிய நிலை இருக்கிறது என்று விஜய்யை EPS அட்டாக் செய்துள்ளார். நம் தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர்கள் எனக் கூறிய அவர், 2026-ல் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற பொதுமக்கள் நல்லாதரவை தரவேண்டும் என்றார்.

Similar News

News January 17, 2026

CM ஸ்டாலின் வேங்கைவயலுக்கு செல்லாதது ஏன்?

image

குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நடந்த வேங்கைவயலுக்கு CM ஸ்டாலின் செல்லாதது குறித்து ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார். ஒரு தனிமனிதனால் நிகழ்த்தப்பட்ட இந்த அநாகரிகத்துக்கு விசாரணை மட்டுமே ஒரே தீர்வு என கூறியுள்ளார். நிலச்சரிவு, பேரிடர் என்றால் CM நேரில் செல்லலாம், ஆனால் இந்த விவகாரத்தை அவர் கோட்டையில் இருந்தே (தலைமைச் செயலகம்) பார்க்கிறார் என தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?

News January 17, 2026

சற்றுமுன்: தமிழகத்தில் கோர விபத்து

image

தென்காசி சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் (மினி பஸ்) கவிழ்ந்து கோர விபத்துக்குள்ளானதில் டிரைவர் மற்றும் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 6 குழந்தைகள் உள்பட 12 பேர் சிகிச்சைக்காக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஹாஸ்பிடலில் உறவினர்கள் கதறி துடித்த காட்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது. இதனால் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

News January 17, 2026

YT-ல் குழந்தைகளின் நேரத்தை கட்டுபடுத்த வேண்டுமா?

image

குழந்தைகளின் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த நேரத்தை பெற்றோர் கட்டுப்படுத்த YouTube புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், குழந்தைகள் YouTube Shorts-க்களை பார்ப்பதற்கான நேர வரம்பை நிர்ணயிக்கவோ அல்லது முழுமையாக தடுக்கவோ முடியும். குழந்தைகள் இந்த வீடியோக்களுக்கு அடிமையாகி வருகிறார்கள் என்ற பெற்றோர்களின் கவலையை தொடர்ந்து YouTube ஜன.14 முதல் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

error: Content is protected !!