News August 21, 2025

உங்களுக்கு ஒரு ‘குட்டி ஸ்டோரி’

image

மழை வேண்டி அனைவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது என்று ஒரு கிராமத்தினர் முடிவு எடுத்தனர். திட்டமிட்ட நாளில் அனைவரும் ஓரிடத்தில் கூடி, மிக பயபக்தியுடன் கடவுளிடம் மழை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் கையில் குடையுடன் அங்கு வந்தான்….இது தானே நம்பிக்கை!

Similar News

News February 6, 2026

ஆதியோகி ரத யாத்திரையை துவக்கி வைக்கும் அமைச்சர்கள்!

image

வரும் பிப்.15-ம் தேதி மகாசிவராத்திரியை முன்னிட்டு புதுச்சேரியில் ஈஷா அறக்கட்டளை சார்பான ஆதியோகி ரத யாத்திரை 3 நாள்கள் நடைபெற உள்ளது. பிப்.8-ம் தேதி புதுச்சேரி அமைச்சர்கள் லட்சுமி நாராயணன் & நமச்சிவாயம் அதனை தொடங்கி வைக்கின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற இந்த ரத யாத்திரையை ஆன்மிக தலைவர்கள் மட்டுமே துவக்கி வைத்தனர். இந்நிலையில், புதுச்சேரியில் அமைச்சர்களே இதனை துவக்கி வைப்பது கவனம் பெற்றுள்ளது.

News February 6, 2026

அதிமுக கூட்டணியில் இணைகிறாரா வேல்முருகன்?

image

திமுக கூட்டணியிலிருந்து <<19065639>>விலகும் முடிவில்<<>> தவாக உள்ளதாக பேசப்படுகிறது. வேல்முருகன் கேட்கும் தொகுதிகளை திமுக ஒதுக்க தயாராக இல்லை என்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. கடந்த முறை பண்ருட்டியில் மட்டுமே போட்டியிட்ட தவாக, இம்முறை அதிக தொகுதிகளை கேட்டுள்ளது. ஆனால் திமுக அதனை மறுத்துவிட்டதால்தான் வேல்முருகன் அதிருப்தியில் இருக்கிறார் என்கின்றனர். அவருடன் தற்போது அதிமுக பேசிவருவதாகவும் கூறப்படுகிறது.

News February 6, 2026

இரட்டை இலக்கத்தை குறி வைக்கும் CPM

image

திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே கடந்த தேர்தலைவிட அதிக தொகுதிகளை கேட்க உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில், திமுகவிடம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெறுவோம் என CPM பெ.சண்முகம் கூறியுள்ளார். மேலும், விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு DMK அழைக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2-ல் CPM வெற்றி பெற்றது.

error: Content is protected !!