News August 21, 2025

தர்மபுரியில் இலவச சுயதொழில் பயிற்சி

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள RSETI தொழில் பயிற்சி நிறுவனத்தில் கட்டுமானம் மற்றும் கான்கிரீட் இலவச தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது. உணவு, உடை, பயிற்சி அனைத்தும் முற்றிலும் இலவசம். பயிற்சி முடிந்த பின்னர் தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படும். முன்பதிவு அவசியம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.8.2025 மேலும் விவரங்களுக்கு: 04342230511, 6383147667ஐ தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News August 21, 2025

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

image

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து நேற்று (ஆகஸ்ட் 20) 1,00,000 கன அடியாக இருந்தது. அது படிப்படியாக குறைந்து இன்று (ஆகஸ்ட் 21) காலை 8 மணி நிலவரப்படி 30,000 கன அடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து குறைந்தபோதிலும், சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் நான்காவது நாளாக தடை நீடிக்கிறது.

News August 21, 2025

தர்மபுரி: தாசில்தார்,VAO லஞ்சம் கேட்டா இத பண்ணுங்க

image

தர்மபுரி மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் மாநில கட்டுப்பாட்டு அறை 044-22321090 (அ) தர்மபுரி மாவட்ட அலுவகத்தை (04342-260042) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். *லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க*

News August 21, 2025

தர்மபுரி: டிகிரி போதும் LIC நிறுவனத்தில் அரசு வேலை

image

LIC நிறுவனம் உதவி நிர்வாக அலுவலர்(பொது), உதவி பொறியாளர், உதவி நிர்வாக அலுவலர்(Chartered Accountant, Company Secretary, Actuarial, Insurance Specialists, Legal) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 850 காலிப்பணியிடங்கள் உள்ளது. இளங்கலை/ பொறியியல் பட்டம் பெற்ற 21-30 வயதிற்குட்பட்டோர் இந்த <>லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 08.09.2025. விபரங்களுக்கு <<17470701>>CLICK HERE<<>>

error: Content is protected !!