News August 21, 2025

திண்டுக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் வரும் 3ம் தேதி மாவட்ட அளவில் பேச்சு போட்டி நடக்கிறது. இந்த போட்டிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

Similar News

News August 21, 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் வருகை விவரம்

image

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி எழுச்சி சுற்று பயணம் குறித்த விவரத்தை திண்டுக்கல் மாவட்ட கிழக்கு,கட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.12.09.25- திண்டுக்கல் வருகை,13- ஆம் தேதி திண்டுக்கல் வர்த்தகர்கள் கூட்டம், நத்தம் தொகுதி, திண்டுக்கல் தொகுதி,14- ஆம் தேதி ஆத்தூர்,ஒட்டன்சத்திரம், பழனி தொகுதி 15- ஆம் தேதி சேலம் கிளம்புதல்.

News August 21, 2025

திண்டுக்கல்: தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாம்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இளம் பெண்கள் சுய விவரக் குறிப்புடன் முகாமில் பங்கேற்று பயனடையலாம். இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவரங்களுக்கு 94990 55924 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என உதவி இயக்குநா் ச.பிரபாவதி தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

திண்டுக்கல்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாரத்திற்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (ஆகஸ்ட் 22) செட்டியபட்டி நாடக மேடை திடலில், காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டை திருத்தம், விண்ணப்பம் உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் கோரிக்கைக்கு உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம்.

error: Content is protected !!