News August 21, 2025

மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டி

image

தருமபுரியில் மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டிகள் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. போட்டிகளில் பங்கேற்க 24ஆம் தேதி காலை 7 மணிக்கு போட்டி தொடங்கும் முன்பாக விளையாட்டு அரங்கில் வீரா்கள், வீராங்கனைகள் தங்களது பெயரைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும். இப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் வீரா்கள், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9442207047, 9443266228 தொடா்பு கொள்ளலாம்.

Similar News

News February 6, 2026

தருமபுரி: உழவர் சந்தை விலை நிலவரம்!

image

தருமபுரி உழவர் சந்தையின் இன்றைய (பிப்.6) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.16, கத்தரிக்காய்: ரூ.25, வெண்டைக்காய்: ரூ.20, முள்ளங்கி: ரூ.16, அவரைக்காய்: ரூ.28, கொத்தவரை: ரூ.46, பச்சைமிளகாய்: ரூ.55,பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

News February 6, 2026

தருமபுரி: Insta காதல்; சிறுமி கடத்தல்!

image

பாலக்கோடு பகுதியை சேர்ந்த வாலிபர் பார்த்திபன் (19). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து வாலிபர் சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த பார்த்திபனை நேற்று (பிப்.5) கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

News February 6, 2026

தருமபுரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

image

லக்கியம்பட்டி, அரூர் மற்றும் இதர துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.7) மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி ஹரூர், மோப்பிரிப்பட்டி, அகரஹாரம், பெத்தூர், சாந்தப்பட்டி, அச்சல்வாடி, லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, உங்காரத்தம்பட்டி, சோகத்தூர், மாந்தோப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.

error: Content is protected !!