News April 8, 2024

நான் செய்த உதவியை மறந்துவிட்டார் மோடி

image

தனது உதவியை மோடி மறந்து விட்டதாக சரத்பவார் விமர்சித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அமைச்சராக தாம் இருந்தபோது, குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு உதவி செய்ததாகவும், ஆனால் அதை மறந்து தன்னை தனிப்பட்ட ரீதியில் மோடி தற்போது விமர்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். மோடியை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவதாகவும், இது ஜனநாயகம் அல்ல சர்வாதிகாரம் என்றும் சரத்பவார் தெரிவித்தார்.

Similar News

News March 18, 2026

சற்றுமுன்: தேர்தலில் போட்டி இல்லை.. திருநாவுக்கரசர்

image

லோக்சபா தேர்தலில் சீட் வழங்கப்படாததால், காங்., மூத்த தலைவர் திருநாவுக்கரசர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், வரும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் திருநாவுக்கரசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ராஜ்யசபா, லோக்சபா எம்பியாக போவேனே தவிர தமிழ்நாட்டில் எம்எல்ஏ, அமைச்சராகும் ஆசையெல்லாம் எனக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்

News March 18, 2026

6 தொகுதிகளால் காங்., – திமுக இடையே பஞ்சாயத்து

image

புதுச்சேரியில் திமுக – காங்., இடையே உடன்பாடு ஏற்படாததற்கு 6 தொகுதிகளில் சிக்கல் நிலவுவதுதான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்பவன், நெல்லித்தோப்பு, மண்ணாடிப்பட்டு, திருபுவனை, மங்கலம், கதிர்காமத்தில் போட்டியிட 2 கட்சிகளும் விரும்புவதால், தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக புதுச்சேரி காங்., தலைவர்கள் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.

News March 18, 2026

CPI-க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

image

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு(CPI) 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் முன்னிலையில் சற்றுமுன் தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை கையெழுத்தானது. கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு தளி மற்றும் பவானிசாகர் தொகுதிகளில் வெற்றி பெற்ற CPI-க்கு இத்தேர்தலில் ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!