News April 8, 2024
ஈரோடு : ஏப்ரல் 15க்குள் இணையதள வசதி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச்சாவடிகளில், 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதற்றமான வாக்குச் சாவடிகள் மற்றும் 1,125 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் வாக்குச் சாவடிகளில் இணையதள வசதிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் ஏற்படுத்தப்படும் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
FLASH: ஈரோட்டில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் பேராசிரியைக்கு கல்லூரி முதல்வர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாள்களாக கல்லூரி மாணவிகள், பேராசிரியைகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
News November 8, 2025
ஈரோடு: ரூ.7,500 வெகுமதி.. மக்களே உஷார்!

ஈரோடு மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!
News November 8, 2025
ஈரோடு மாவட்ட காவலர் இரவு ரோந்து பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.


