News August 21, 2025

38 மாவட்டங்களிலும்.. அரசு புதிய அறிவிப்பு

image

வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிக்கு TN அரசு டெண்டர் கோரியுள்ளது. 38 மாவட்டங்களில் சுமார் 35 லட்சம் வெளிமாநிலத்தவர்கள் பணியாற்றி வருவதாக தகவல் கூறப்படுகிறது. இந்நிலையில், *அவர்கள் தமிழகம் வருவதற்கான காரணம், *எங்கு உள்ளனர் *வாழ்க்கை நிலை *சுகாதார நிலை *என்ன பணி செய்கின்றனர் என்பதை கணக்கெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உங்கள் கருத்து?

Similar News

News August 21, 2025

முதல்முறையாக இந்தியா வரும் ஃபிஜி PM

image

ஃபிஜி நாட்டின் PM சிடிவேனி லிகமமடா ரபுகா, முதல்முறையாக ஆக.24-ல் இந்தியா வருகிறார். ஆக.26 வரை இங்கு இருக்கும் அவர், ஜனாதிபதி முர்மு, PM மோடியைச் சந்திக்கிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. மேலும் டெல்லியில் உள்ள உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் ‘அமைதி பெருங்கடல்’ (Ocean of peace) என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.

News August 21, 2025

பொது அறிவு வினா- விடை பதில்கள்!

image

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17471264>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. சுகுமார் சென்.
2. 1608.
3. திருமூலர்.
4. தமிழ்.
5. வெறுங்கை அல்லது வெறுங்கயுடன் விளையாடுதல்.
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க.

News August 21, 2025

இந்த நடிகை போல நீ ஆகணும்.. டார்ச்சர் செய்த கணவர்!

image

‘நடிகை நோரா பதேகி போல நீ மாறணும்’ என கூறி உ.பி.யை சேர்ந்த கணவர் ஒருவர், தனது மனைவியை கொடுமை செய்துள்ளார். தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி, இல்லையென்றால் அன்று சாப்பாடு கட் என கண்டிஷன்களை வைத்தவர், கர்ப்பிணியான அவருக்கு சீக்ரெட்டாக கருக்கலைப்பு மாத்திரையும் கொடுத்துள்ளார். இந்த கொடுமையை அனுபவிக்க அப்பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டுக்கு 50 லட்சம் வரதட்சணை கொடுத்துள்ளனர். இவர்களை என்ன சொல்வது?

error: Content is protected !!