News August 21, 2025
பேரறிஞர் அண்ணா பொன்மொழிகள்

*உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன். வாழ்த்துகுரியவன். அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுத்துவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையேறச் செய்வதாகும்.
*போட்டியும், பொறாமையும், பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே.
*சமத்துவம், சமதர்மம் போன்ற லட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம்
Similar News
News August 21, 2025
மாநாடு: பெண்கள் பாத்ரூமை ஆண்கள் பயன்படுத்தும் நிலை

தவெக மாநாட்டுத் திடலில் பெண்கள் கழிப்பறையை ஆண்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. போதிய கழிப்பறை வசதி இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே குடிநீர் குழாயில் காற்று மட்டுமே வருவது, ஸ்நாக்ஸ் அனைவருக்கும் செல்லாமல் இருப்பது என சில குறைகள் கூறப்படுகின்றன. வெயிலும் கொளுத்துவதால் தொண்டர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
News August 21, 2025
பகல் 12 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

✪மதுரை <<17471454>>மாநாட்டில்<<>> பரபரப்பு.. அடுத்தடுத்து 50 பேர் மயக்கம்
✪புதிய <<17470378>>கட்சி <<>>தொடங்குபவரும் நம் தலைவரை தான் போற்றுகின்றனர்.. EPS
✪தாக்குதலை தொடர்ந்து <<17470879>>டெல்லி<<>> CM-க்கு Z பிரிவு பாதுகாப்பு
✪தங்கம் விலை சவரனுக்கு ₹400 உயர்வு
✪ரோஹித், <<17469460>>கோலி <<>>பெயர் இல்லாததது ஏன்.. ICC விளக்கம் ✪ ₹500 <<17471292>>கோடியை <<>>நெருங்கிய ‘கூலி’ வசூல்
News August 21, 2025
5% தள்ளுபடியில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்: ரஷ்யா

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதால் இந்தியாவுக்கு 50% வரி விதித்துள்ளது USA. இருப்பினும் கச்சா எண்ணெய் விநியோகம் 5% தள்ளுபடியில் தொடரும் என இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா அறிவித்துள்ளார். USA-ன் பல்வேறு வர்த்தக அழுத்தங்களுக்கு மத்தியிலும் இருநாடுகளுக்கும் இடையேயான எரிபொருள் ஒத்துழைப்பு தொடரும் என்று ரஷ்ய துணை தூதரக தலைவர் ரோமன் பாபுஷ்கின் கூறியுள்ளார்.