News August 21, 2025
CPR-க்கு தமிழக கட்சிகள் ஆதரவு தாருங்கள்: அண்ணாமலை

தமிழக அரசியல் கட்சிகள் CPR-க்கு ஆதரவு தர வேண்டுமென அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், CM, PM குற்றம் புரிந்தால் பதவிநீக்கம் செய்வதற்கான மசோதா குறித்து பேசிய அவர், மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்படும் புதிய சட்டம் வரவேற்கத்தக்கது என்றார். இச்சட்டத்தால் தவறு செய்தவர்கள் சிறைக்கு செல்வர் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் ஏற்படும் என்றார்.
Similar News
News August 21, 2025
தஞ்சை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி ?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,<
News August 21, 2025
கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய மசோதா நிறைவேற்றம்

RCB வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தேசிய அளவில் சர்ச்சையானது. இந்நிலையில், 2025 கூட்ட கட்டுப்பாட்டு மசோதாவை கர்நாடக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதன்படி, நிகழ்வின் நோக்கம், எதிர்பார்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, அதற்கேற்றார்போல் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒரு விண்ணப்பமாக அளித்து, பொதுப்பணி உள்ளிட்ட சில துறைகளில் NOC சான்றும் பெற வேண்டும்.
News August 21, 2025
நீ அரியணை ஏறும் நாள் வரும்: விஜய் தாயார் வாழ்த்து

தமிழக வெற்றிக் கழகம், தடைகளை வெல்லும் கழகம் என்று நீ (விஜய்) காட்டு என ஷோபா சந்திரசேகர் வாழ்த்து கூறியுள்ளார். தவெக 2-வது மாநில மாநாட்டையொட்டி, திரையில் உன்னைப் பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி தங்கைகள் அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நீ அரியணை ஏறும் நாள் வரும், அதுவே உன் தொண்டர்களின் திருநாள் என்றும் உணர்ச்சிபொங்க தெரிவித்துள்ளார். வாகை சூடுவாரா விஜய்?