News August 21, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 434 ▶குறள்: குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை. ▶ பொருள்: குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
Similar News
News January 14, 2026
குமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (14.01.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .
News January 14, 2026
‘மத்திய பட்ஜெட்’ மக்களிடம் கருத்து கேட்கும் அரசு

பிப்.1-ம் தேதி 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது. இந்நிலையில், பட்ஜெட் உருவாக்கம் குறித்து பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை ஜன.16-ம் தேதிக்குள் வழங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு MyGov.in-ல் லாகின் செய்து Activities→Union Budget 2026-27→Comment Box-ல் கருத்துகளை பதிவிடுங்கள். இதனால், மக்களின் எதிர்பார்ப்புகளும் பட்ஜெட்டில் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது.
News January 14, 2026
பொங்கல் வாழ்த்து அட்டைகள் பார்த்திருக்கிறீர்களா?

இன்று வாட்ஸ்ஆப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி, நம் பொங்கல் வாழ்த்துகளை சொல்லி விடுகிறோம். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை, பொங்கல் என்றாலே வாழ்த்து அட்டைகள்தான். பொங்கல் காட்சிகள், நடிகர்கள், தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற வாழ்த்து அட்டைகளை பார்த்துப் பார்த்து வாங்கி, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தபாலில் அனுப்புவோம். தபால்காரரிடம் இருந்து வாழ்த்து அட்டையை வாங்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி!


